உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு

ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு

கோவை; நடப்பு கல்வியாண்டிற்கான (2025---2026) ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான, பொதுமாறுதல் கலந்தாய்வு, ராஜ வீதியில் அமைந்துள்ள துணி வணிகர் சங்க பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று நடைபெறுகிறது. இன்று மாவட்டத்திற்குள் இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ள நிலையில், மாவட்டத்தில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் இதில் பங்கேற்கின்றனர். கலந்தாய்வில் பங்கேற்க வரும் ஆசிரியர் பயிற்றுநர்கள், அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே கலந்தாய்வு மையத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை (ஜூலை 23) மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை