மேலும் செய்திகள்
மதுரை மாவட்டத்தில் குடியரசு தின கோலாகலம்
27-Jan-2026
கோவை: அகில இந்திய அளவில் வரும் 12ம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் குறித்த ஆயத்த மாநாடு, சிங்காநல்லுாரில் உள்ள ெஹச்.எம்.எஸ். தொழிற்சங்க அலுவலக வளாகத்தில் நடந்தது. ஹெச்.எம்.எஸ்., தொழிற் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ராஜாமணி தலைமை வகித்தார்.ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட கவுன்சில் செயலாளர் தங்கவேல் துவக்கி வைத்தார். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயலாளர் ஆறுமுகம் பேசுகையில், ''தொழிலாளர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் இந்த போராட்டத்தை நடத்த வேண்டும்,'' என்றார். எல்.பி.எப், ஐ.என்.டி.யூ.சி, சி.ஐ.டி.யு, எல்.பி.எப். நிர்வாகிகள் பங்கேற்றனர்.
27-Jan-2026