உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரவுடிகளுக்கு கெட் அவுட்; அடுத்த பட்டியல் தயார்

ரவுடிகளுக்கு கெட் அவுட்; அடுத்த பட்டியல் தயார்

கோவை : மாநகரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ரவுடிகளை, மாநகரில் இருந்து வெளியேற்றும் வகையில், 25 பேர் கொண்ட 'லிஸ்ட்' தயார் செய்யப்பட்டுள்ளது.கோவை மாநகர பகுதிகளில், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு, பொது அமைதியை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் ரவுடிகளை, சென்னை சிட்டி போலீஸ் சட்டத்தின் கீழ் வெளியேற்ற, போலீஸ் கமிஷனர் திட்டமிட்டு, தற்போது வரை 110 பேர் மாநகரில் இருந்து வெளியேற உத்தரவு பிறபித்துள்ளார்.இந்த உத்தரவை மீறி, மாநகருக்குள் வருவோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். உத்தரவை மீறி உயர் நீதிமன்றத்தில் இருவர் தாக்கல் செய்த மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.உத்தரவை மீறி சிட்டிக்குள் வந்த, 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில், பீர் முகமது, அருண் ஹாசன் மற்றும் லோகேஸ்வரன் ஆகியோரை, குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.அடுத்த கட்டமாக மேலும் 25 பேர் கண்டறியப்பட்டு மாநகரை விட்டு வெளியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை