உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பள்ளியில் நல்விருந்து திட்டம்

அரசு பள்ளியில் நல்விருந்து திட்டம்

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நல்விருந்து திட்டம் துவங்கப்பட்டது. தமிழகம் முழுதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நல்விருந்து திட்டம் துவங்க அரசு அறிவுறுத்தியது. இதை தொடர்ந்து நேற்று, கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் அரசு நடுநிலைப்பள்ளியில், நல்விருந்து திட்டம் துவங்கப்பட்டது. இதில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவாக, காளான் பிரியாணியை முன்னாள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் செந்தமிழ் செல்வி வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் ஈஸ்வரி, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி