உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு கலை கல்லுாரி விளையாட்டு தின விழா

அரசு கலை கல்லுாரி விளையாட்டு தின விழா

அரசு கலை கல்லுாரியின் விளையாட்டு தின விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.கோவை அரசு கலைக்கல்லுாரி மாணவ, மாணவியருக்கு ஆண்டுதோறும் தடகளம், கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தி, விளையாட்டு தின விழாவில் பரிசுகள் வழங்கப்படுகின்றன.இந்தாண்டுக்கான விளையாட்டு தின விழாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.நேற்று முன்தினம் நடந்த விளையாட்டு தின விழாவில், பல்வேறு போட்டிகளுக்கான இறுதிப்போட்டிகள், பேராசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.விளையாட்டு தின விழாவில், எஸ்.ஆர்.கே.வி., மாருதி உடற்கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயபால், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கல்லுாரி முதல்வர் உலகி தலைமை தாங்கினார். உடற்கல்வித்துறை இயக்குனர் விஜயகுமார், ஆண்டு அறிக்கையை வெளியிட்டார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ