உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆள் பிடிக்க சென்ற அரசு பஸ்கள்: கோவை பயணிகள் அவதி நீடிப்பு

 ஆள் பிடிக்க சென்ற அரசு பஸ்கள்: கோவை பயணிகள் அவதி நீடிப்பு

கோவை: கோவையில் செம்மொழி பூங்காவை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். விழாவுக்கு கூட்டம் சேர்க்க, பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரசு, தனியார் பஸ்களில் ஆட்களை கொண்டு வந்து இறக்கினர். அரசு, தனியார் பஸ்கள் மட்டுமின்றி ஆம்னி பஸ்களிலும், ஆட்களை ஏற்றி வந்ததால் காந்திபுரத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டது. அவிநாசி ரோடு வழியாக வந்த வாகனங்கள், மத்திய சிறை முன்பு நிறுத்தப்பட்டு, ஆட்கள் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் கூட்டமாக செம்மொழி பூங்காவுக்கு வந்தனர். இதனால் அந்த சாலை, ஒருவழி பாதையாக மாற்றப்பட்டது. விழா முடிந்ததும் கூட்டத்தினரை, அவரவர் பகுதியில் கொண்டு விட பஸ்கள் புறப்பட்டன. வழக்கமான எண்ணிக்கையில் பஸ்கள் ஓடாததால், பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்து அவதிப்பட்டனர். கடந்த வாரம், மத்திய அரசுக்கு எதிராக செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த திமுக ஆர்ப்பாட்டத்துக்கும், இதே போன்று பஸ்கள் திருப்பி விடப்பட்டதால், பயணிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது. போக்குவரத்து அதிகாரிகளிடம் இது குறித்து கேட்டபோது, 'இந்த விஷயத்தில் நாங்கள் எதுவும் செய்வதற்கில்லை' என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை