உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் கோர்ட் விசிட்

அரசு மாதிரி பள்ளி மாணவர்கள் கோர்ட் விசிட்

கோவை; கோவை, ஆர்.எஸ்.புரத்தில், அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் வாழ்க்கை கல்வி முறை அறிந்து கொள்வதற்காக,மாதந்தோறும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். இப்பள்ளியில் பயிலும் 10 ம் வகுப்பு மாணவர்கள், 71 பேர் நேற்று, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்தனர். நீதிமன்ற விசாரணை நடைமுறை குறித்து அறிந்து கொள்வற்காக வந்த அவர்கள், பல்வேறு கோர்ட் ஹாலில் அமர்ந்து, வழக்கு விசாரணையை கவனித்தனர். மாதிரி பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் உடன் வந்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை