உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகுணா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

சுகுணா கல்லுாரியில் பட்டமளிப்பு விழா

கோவை,: கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா கலையரங்கில், சுகுணா கலை அறிவியல் கல்லுாரியின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. சுகுணா கல்வி நிறுவனங்களின் தலைவர் லட்சுமி நாராயணசாமி தலைமை வகித்தார்.விழாவில், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல், பட்டமேற்படிப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, கணிசமாக உயர்ந்துள்ளது. பெண்கள் கல்விக்கு மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. மகளிர் மேம்பாட்டுக்கும், முன்னேற்றத்துக்கும் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை, அறிந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார்.விழாவில், கல்லுாரியின் செயலாளர் சுகுணா முன்னிலை வகித்தார். முதல்வர் சேகர் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை