| ADDED : பிப் 12, 2024 11:13 PM
பொள்ளாச்சி;தமிழ்நாடு வேளாண் பல்கலையில், தைவான் உலக காய்கறி மையம் சார்பில், விவசாயிகளுக்கு தக்காளி ஒட்டுக்கட்டுதல் குறித்த செயல்திறன் பயிற்சி அளிக்கப்பட்டது.தக்காளி செடியை, நோய் எதிர்ப்பு திறன் உடைய கத்தரி ரகத்தின் வேர்ப்பகுதியுடன் இணைத்து, ஒட்டு கட்டுவதன் வாயிலாக, மழைக்காலங்களில் பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து பாதுகாக்கலாம்.இந்த ஒட்டுக்கட்டுதல் தொழில்நுட்பத்தை, விவசாயிகள் மற்றும் காய்கறி நாற்று உற்பத்தியாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், ஒட்டு கட்டுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில், ஒட்டுத்தக்காளியின் நோய் எதிர்ப்பு திறனை பற்றியும், ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை, பூஞ்சாண கொல்லிகள் உபயோகம், இணையவழி இடுபொருள் விற்பனை, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்பு திறன் மேம்பாடு, உயிர்த்தகவியலின் பங்களிப்பு ஆகியவை குறித்து வல்லுனர்கள் பயிற்சி அளித்தனர்.இதில், பயிர் நோயியல் துறை தலைவர் அங்கப்பன், பல்கலை பயிற்சி பிரிவு தலைவர் ஆனந்தராஜா, மதுக்கரை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.