உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மணி மேல்நிலைப்பள்ளியில் பசுமை நிறைந்த நினைவுகளே!

மணி மேல்நிலைப்பள்ளியில் பசுமை நிறைந்த நினைவுகளே!

கோவை : கோவை, பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப்பள்ளியில், நேற்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.1998ம் ஆண்டு 10ம் வகுப்பு மற்றும் 2000ம் ஆண்டு 12ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்வில், 20க்கும் மேற்பட்ட முன்னாள் ஆசிரியர்கள், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.விழா நிகழ்ச்சியில், முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வைத் தொடர்ந்து, அனைவரும் பழைய வகுப்பறைகளுக்கு சென்று, கடந்த கால நாட்களை நினைவுகூர்ந்தனர்.ஆசிரியர்கள் வகுப்பறையில் பாடம் எடுத்ததை, மாணவர்கள் அதே இடங்களில் நின்று மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினர். தங்கள் பள்ளி நாட்களின் மறக்கமுடியாத தருணங்கள், நண்பர்களுடன் பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தி, சொல்லி மகிழ்ந்தனர்.பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியரும், ஜி.கே.என்.எம். அறக்கட்டளை முதன்மை கல்வி அதிகாரியுமான, சத்திய நாராயணன் தலைமையில், நடைபெற்ற நிகழ்வை ஆசிரியர்கள் பழனிவேல்ராஜன், உமாமகேஸ்வரி மற்றும் மஹாலட்சுமி ஒருங்கிணைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை