மேலும் செய்திகள்
குரூப் -2, 2 ஏ தேர்வு; இலவச பயிற்சி வகுப்பு
18-Jul-2025
கோவை; டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், இன்று துவங்குகிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், நடப்பாண்டுக்கான குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான 645 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதி உள்ள தகுதி வாய்ந்த மனுதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் ஆக., 13ம் தேதி. இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், கோவை மாவட்ட வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.https://tamilnadu careerservices.tn.gov.inஎன்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 3 எடுத்துக் கொண்டு, இன்று அலுவலகத்துக்கு நேரில் செல்ல வேண்டும். மேட்டுப்பாளையம் ரோடு, கவுண்டம்பாளையம் அடுத்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அணுக வேண்டும் எனவும் அல்லது https://t.me/cbedecgc என்ற டெலிகிராமில் இணைவதன் வாயிலாகவும், இலவச பயிற்சி வகுப்பு குறித்த தகவல்கள் பெற்று பயனடையலாம் என, மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.விபரங்களுக்கு: 0422 - 2642388, 94990 55937.
18-Jul-2025