உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தவறான இடத்தில் வழிகாட்டி; தடுமாறும் சுற்றுலா பயணியர்

தவறான இடத்தில் வழிகாட்டி; தடுமாறும் சுற்றுலா பயணியர்

வால்பாறை; வால்பாறையில், தவறான இடத்தில் அமைக்கப்பட்ட வழிகாட்டி பலகையால், சுற்றுலா பயணியர் தடுமாறுகின்றனர்.சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆழியாறு முதல் வால்பாறை வரை, பல்வேறு இடங்களில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டி பலகையில் சுற்றுலா பயணியர் செல்ல வேண்டிய இடம், துாரம் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வைக்கப்பட வேண்டிய வழிகாட்டி பலகை, நான்கு ரோடுகள் பிரியும் ஸ்டேன்மோர் சந்திப்பில் தவறுதலாக வைக்கப்பட்டுள்ளது. இதனால், வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர் வழிகாட்டி பலகையில் உள்ளதை பார்த்துவிட்டு, திசை மாறி செல்கின்றனர். இதனால் அந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.எனவே, வழிகாட்டி பலகையை புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்பது சுற்றுலா பயணியரின் கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி