உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  துப்பாக்கி பயன்படுத்துவோர் உரிமம் புதுப்பிப்பு

 துப்பாக்கி பயன்படுத்துவோர் உரிமம் புதுப்பிப்பு

கோவை: பாதுகாப்பு காரணங் களுக்காக துப்பாக்கி பயன்படுத்துவோர் அதற் கான உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டிருந்தனர். துப்பாக்கியுடன் உரிமை தாரர்கள் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிறைமதியிடம் துப்பாக்கி மற்றும் ஆவணங்களை காண்பித்து தங்கள் மீதோ துப்பாக்கியின் மீதோ எந்த குற்றங்களும் இல்லை என சான்றளித்தனர்.அதன் பின் நீதித்துறை பிரிவில் உரிமங்களை புதுப்பித்து சென்றனர். இதில் பலர் தொழிலதிபர்கள், பலரும் பழைய ரக துப்பாக்கிகளை வைத்திருந்தனர். சிலர் புதிய ரக துப்பாக்கிகளை வைத்திருந்தனர். பண்ணை வீடுகள் மற்றும் தோட்டங்களில் வசிக்கும் விவசாயிகள் பலரும் துப்பாக்கிகளை தங்களது பாதுகாப்பிற்காக வைத்திருப்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ