மேலும் செய்திகள்
ரயிலில் 8.200 கிலோ கஞ்சா கடத்தியவர் கைது
15-Oct-2025
கோவை: பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், மலுமிச்சம்பட்டி பிரிவு அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த நபரிடம் சோதனை நடத்தினர். அதில் அவர் 6.300 கிலோ கஞ்சாவை கடத்தி செல்வது தெரிந்தது. விசாரணையில், அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சந்தீப்குமார் பெஹ்ரா, 22 எனத் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க எஸ்.பி., கார்த்திகேயன் பரிந்துரைத்தார். மாவட்ட கலெக்டர் பவன்குமார் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். சந்தீப்குமாரிடம் உத்தரவு வழங்கப்பட்டது.
15-Oct-2025