உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாரதீய வித்யா பவனில் நடந்த ஆராவமுதாச்சாரியாரின் ஹரிகதை 

 பாரதீய வித்யா பவனில் நடந்த ஆராவமுதாச்சாரியாரின் ஹரிகதை 

ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் பாரதீய வித்யா பவனில் கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார் ஆற்றும் 'ஹரிகதை' நிகழ்ச்சி, இன்றுடன் (நவ.23) நிறைவடைகிறது. 'பக்த பிரஹலாதா', 'குலசேகரர் கண்ட ராமன்', 'சுந்தர காண்ட சாரம்' என மூன்று தலைப்புகளில் இந்த ஹரிகதை நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதல் நாளில், 'பக்த பிரஹலகாதா' பற்றி விரிவாக கூறிய ஆராவமுதாச்சாரியார், இரண்டாம் நாளில் 'குலசேகரர் காண்ட ராமன்' குறித்து பக்தி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு வயலின் கலைஞர் ஹேமலதா, மிருதங்க கலைஞர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து இசை வாசித்தனர். நிகழ்வில் பாரதீய வித்யா பவன் கோவை நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பவன் நாட்டிய விழா குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்