உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுகாதார நிலைய பணிகள்; விண்ணப்பம் வரவேற்பு

சுகாதார நிலைய பணிகள்; விண்ணப்பம் வரவேற்பு

கோவை; கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில், காலியாக உள்ள இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆயுஷ் மருத்துவர், மருந்து வழங்குனர், உதவியாளர், பல்நோக்கு பணியாளர், கணக்கு உதவியாளர், டேட்டா ஆபரேட்டர் உள்ளிட்ட பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. பணி குறித்த முழுமையான விபரங்கள், விண்ணப்ப படிவத்தையும் https://coimbatore.nic.inஎன்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். தகுதியான நபர்கள், சான்றிதழ்களில் சுயஒப்பம் இட்ட நகல்களை இணைத்து, 22ம் தேதி மாலை 5 மணிக்குள் ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தில் நேரிலோ, தபாலிலோ அளிக்கலாம், என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை