உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முள்ளம்பன்றிகள் கிராமத்தில் உலா

முள்ளம்பன்றிகள் கிராமத்தில் உலா

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கிராமத்தில் உலா வரும் முள்ளம்பன்றிகளால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே, வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த முள்ளம்பன்றி, குஞ்சிபாளையம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுகின்றன. பகலில் புதருக்குள் மறைந்து கொள்ளும் முள்ளம்பன்றி, நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் வெளியில் வருகின்றன. இது குறித்து, வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை ஊழியர்கள், முள்ளம்பன்றி நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். புதருக்குள் சென்றதால் அதை பிடிக்க முடியவில்லை, என, பொதுமக்கள் தெரிவித்தனர். முள்ளம்பன்றியை பிடித்து வனத்தில் விட வேண்டும் என, வனத்துறைக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை