உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இங்கு இயேசு வரலாறாக பேசப்படுகிறார்... ராமர் கட்டுக்கதையாக பார்க்கப்படுகிறார் 

இங்கு இயேசு வரலாறாக பேசப்படுகிறார்... ராமர் கட்டுக்கதையாக பார்க்கப்படுகிறார் 

கோவை : வெராண்டா கிளப் சார்பில், 'வெஸ்டர்ன் காட்ஸ் லைட் பெஸ்ட்' எனும் சிறப்பு கருத்தரங்கு, புரூக் பீல்ட்ஸ் மாலில், நேற்று முன்தினம் துவங்கியது; நேற்று நிறைவடைந்தது.கருத்தரங்கில், 'வரலாற்றில் உள்ள திரிபுகளை நீக்குதல்' எனும் தலைப்பில், கேப்டன் பிரவீன் சதுர்வேதி பேசுகையில்,''தற்போது இருப்பது இந்தியாவின் உண்மையான வரலாறு இல்லை. போலி வரலாறுகளுக்கு மாற்றாக, இந்தியாவின் உண்மை வரலாற்றை சொல்ல வேண்டும். போலி பிரசாரங்களுக்கு பதில், எதிர் பிரசாரங்கள் மட்டுமே. ஒரு சிலர் மட்டுமே, நமது உண்மையான வரலாறை அறிந்துள்ளனர். பல கோடி இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர். யூதர்களின் இன படுகொலைகளுக்கு உலகம் முழுவதும் நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளன. இந்துக்கள் கொல்லப்பட்டது குறித்து யாரும் பேசவில்லை. அதற்கு ஒரு நினைவு சின்னமும் கிடையாது. இந்துக்கள், இந்தியர்களின் வரலாறு, முகலாயர்களின் படையெடுப்பால் அழிக்கப்பட்டன. பல லட்சம் உயிர் பலியுடன்தான், இஸ்லாமிய படையெடுப்புகள் முடிந்திருக்கின்றன. ஆங்கில கல்வியை ஆயுதமாக மாற்றி, பாரத பெருமைகளை அழித்தனர். காலம், பிரதமர் மோடியை இந்தியாவுக்கு பரிசாக தந்துள்ளது,'' என்றார். எழுத்தாளர் அப்பாஸ் மலாடியார் பேசுகையில், ''நாம் தர்மத்தை நம்புகிறோம். தர்மம் என்பது ஒரு வாழ்க்கை நெறிமுறை. இந்திய வரலாறு முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. தவறான, போலியான கருத்துக்களே புனையப்பட்டுள்ளன. தாஜ்மஹால் அன்பின் சின்னமில்லை. இந்துக்கள் படுகொலைகளின் அடையாளம் தாஜ்மகால். இங்கு, இயேசு வரலாறாக பேசப்படுகிறார். ராமர் கட்டுக்கதையாக பார்க்கப்படுகிறார். அறிவியல் பூர்வமான விஷயங்களை கடைபிடிக்க, பல்வேறு கருத்துக்கள் ஹிந்து மதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன. உலகத்துக்கு பாரதம் அளித்த நவீன அறிவியல் அறிவு கொடைகள் ஏராளம். அவை அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளன,'' என்றார்.கருத்தரங்கில், பல்வேறு எழுத்தாளர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. வெராண்டா கிளப் இயக்குனர் சரவணகுமார், கேப்டன் பிரவீன் சவுத்ரி, வெராண்டா கிளப் தலைவர் பேராசிரியர் கனகசபாபதி, ஆர்.எஸ்.எஸ்., மூத்த நிர்வாகி ரத்தன் சாரதா, யோகி ஆதித்யநாத் சுயசரிதை எழுதிய சாந்தனு குப்தா, வெராண்டா கிளப் நிறுவனர் ஜகன்னாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Mohamed Ibrahim
அக் 23, 2024 06:32

புதுப் புது கதைகளை கூறி மக்களை குழப்ப வேண்டும் அப்பொழுது தான் தேச நலனுக்கு ஏதும் செய்யாத கும்பலின் காலம் செல்லும்


Ken
அக் 23, 2024 04:38

உங்கள் இஷ்ட தெய்வத்த வழிபடும் பொழுதோ அல்லது மண்ணை நெற்றியில் பூசிக்கொழும் பொழுதோ யாரேனும் தடுதனரா


Manivannan G
அக் 22, 2024 23:46

காலப் பயணம் செய்து சோழ நாட்டில் 10-ஆம் நூற்றாண்டு இருந்து இந்திய நாட்டிற்கு 21-ஆம் நூற்றாண்டு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி. மனிதம் போற்றுவோம்.


Balaji
அக் 22, 2024 14:01

இது எந்த வகையை சேர்ந்தது ?


Senthil
அக் 22, 2024 12:19

அதெல்லாம் சரி, நான் இராஜராஜ சோழனின் சோழ நாட்டைச் சேர்ந்தவன். என்னுடைய நாட்டை அடக்குமுறையால் இந்தியாவுடன் சேர்த்து வைத்திருக்கிறார்களே, அதைப் பற்றியும் கொஞ்சம் பேசுங்களே எனக்கும் தாங்கள் பேசுகிற பாரதம், ராமர், இயேசு, தாஜ்மஹால் போன்ற எந்த விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் எனது முன்னோர்களான மாரியையும் கருப்பனையும் வழிபட்டு தரையில் உள்ள மண்ணை எடுத்து நெற்றியில் பூசிக்கொள்பவன். ஏன் என்னை எனது அடையாளங்களோடு வாழ விடாமல் அடக்குமுறை ஆட்சி நடத்துகிறீர்கள்? பெரிய நாட்டை ஆள வேண்டும் என்ற ஆசைதானே? வேறுபட்ட எல்லோரையும் கட்டாயப்படுத்தி ஒரே நாடு என வைத்திருப்பதால் என்ன பயன்? ஆளுகின்றவர்களைத் தவிர மற்ற அனைவரும் மனக்கஷ்டத்தில்தானே இருக்கிறோம்.


Manivannan G
அக் 23, 2024 00:07

காலப்பயணம் மேற்கொண்டு சோழநாட்டில் பத்தாம் நூற்றாண்டு இருந்து இந்திய நாட்டிற்கு 21 ஆம் நூற்றாண்டு வருகை தந்தமைக்கு நன்றி... மனிதம் போற்றுவோம்...


Saravanaperumal Thiruvadi
அக் 22, 2024 11:05

இயேசு பிறந்து 2000 வருடம் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள் அதை நாள்காட்டியாகவும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் இந்திய அரசே அந்த நாள்காட்டி தான் பயன்படுத்துகிறது அதேசமயம் ராமர் பிறந்து 2 லட்சம் கோடி வருஷமாச்சுனு சொல்றாங்க இப்படி பேசிட்டு இருந்தா கட்டு கதையா தான் இருக்கும்


Senthil
அக் 22, 2024 12:05

எல்லாம் பொய்


Balasubramanian
அக் 22, 2024 10:16

Dr . M. L Raja ராமாயண மகாபாரத இதிகாசங்கள் பற்றி விளக்கங்கள் கொடுத்திருக்கிறார்.


Tetra
அக் 22, 2024 07:34

அறிவில்லாத பதிவு. பல கோடி படித்த, படிக்காத மக்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் திராவிட கழக பேச்சு.


venugopal s
அக் 21, 2024 16:36

எல்லா மதங்களும் கட்டுக்கதைகள் என்ற உண்மையை அறிவுள்ளவர்கள் உணர்ந்து உள்ளனர்!


Senthil
அக் 22, 2024 11:51

மனிதனை மிருகங்களிலிருந்து வேறுபடுத்தி நல்வழியில் வாழ மனிதனே உருவாக்கிய கதைகள்தான் மனிதனே கட்டிய கோயில்கள், மனிதனே உருவாக்கிய சிலைகள். அதைக் கொண்டே மனிதர்கள் அடித்துக்கொண்டும் சாகிறார்கள். காரணம் ஒவ்வொருத்தரும் தான் பெரியவன் என்பதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த அனைத்தும் நடக்கிறது. இன்று கோயில்கள், பள்ளிவாசல், சர்ச் என்று உள்ள வழிபாட்டு இடங்களில் பெரும்பாலானவை முன்பு மனிதன் இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக பயண்படுத்தப்பட்டவைகளே. அதில் திடீரென கடவுள் வந்து உட்கார்ந்து விடுவாரா? முட்டாள்கள் மற்றவர்களை முட்டாள்களாக்கி சொகுசாக வாழ்கிறார்கள்.


Senthil
அக் 22, 2024 12:00

Sorry சார், இவை அனைத்தும் கட்டுக்கதைகள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள். ஒரே கிராமத்திற்கு வார்டு மெம்பர், தலைவர், செயலாளர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், தலையாரி, கிராம நிர்வாக அலுவலர், வருவாய ஆய்வாளர் என நூற்றுக்கணக்கான பேர் பங்குபோட்டு சாப்பிடுவதில்லையா அதுபோலதான்.


Neelachandran
அக் 21, 2024 12:22

ஆங்கிலத்தை ஒழித்து ஹிந்தியை திணிக்காதீர்கள்.தமிழர்கள் எல்லா துறைகளிலும் சோபிப்பதற்கு ஆங்கிலம்தான் காரணம்


Kannan
அக் 21, 2024 14:31

ஆங்கிலத்தோடு இந்தியையும் சேர்த்து படித்து வளர்ந்தால் தமிழன் இன்னும் சோபிப்பான்.


Ĺionel
அக் 22, 2024 09:52

??


Senthil
அக் 22, 2024 11:43

மிகச்சரியான கருத்து. வெறும் ஹிந்தியை மட்டுமே தெரிந்தவர்கள் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கூலி வேலை செய்து வயிறு வளர்க்கும் உயர்ந்த மொழி ஹிந்தி பேசுபவர்களை சிறிய மொழியான ஆங்கிலத்தையும் கற்றுக்கொண்டு தமிழர்களைப் போல வாழ்வில் முன்னேறட்டும். எவ்வளவு காலத்திற்குத்தான் தமிழர்களின் ப்ளேட்டைக் கழுவிக் கொண்டிருப்பார்கள் உயர்மிகு ஹிந்தி மொழி மட்டும் பேசத் தெரிந்தவர்கள்.


சமீபத்திய செய்தி