உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பண்டிகை நாளில் அதிக கட்டணம்; ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

பண்டிகை நாளில் அதிக கட்டணம்; ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

கோவை : ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, கோவையிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்ட ஆம்னி பஸ்களில் விதிமுறை மீறலுக்காக, அபராதம் விதிக்கப்பட்டது.கோவையிலிருந்து பெங்களூரு, சென்னை, மைசூரு, தமிழகம் மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளுக்கும் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன.கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் அவிநாசி சாலை கணியூர் சோதனைச்சாவடியில் போக்குவரத்துத் துறை மோட்டார் வாகன ஆய்வாளர்கள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.இதில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் இரட்டிப்பு கட்டணம் வசூலித்தல், பயணிகளுக்கு போதிய வசதிகள் இல்லாதது, சரியான கால அவகாசத்தில் பயண நேரம் இல்லாதது உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தன.மொத்தம் 294 ஆம்னி பஸ்கள் சோதனை செய்யப்பட்டன. இதில் 39 ஆம்னி பஸ்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.இதுகுறித்து கோவை சரக போக்குவரத்துத்துறை இணை கமிஷனர் சிவக்குமரன் கூறுகையில், கோவையிலிருந்து இயக்கப்படும் பெரும்பாலான ஆம்னிபஸ்கள் ஓசூரிலும், சென்னை புறநகர் பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டன. கோவைக்கு வந்த ஆம்னி பஸ்களை சோதனையிட்டு, விதிமீறலுக்காக ரூ.95,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை