உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெள்ளை ஈ கட்டுப்படுத்த உயரழுத்த மருந்து தெளிப்பான்

வெள்ளை ஈ கட்டுப்படுத்த உயரழுத்த மருந்து தெளிப்பான்

பொள்ளாச்சி : தென்னை மரங்களில் வெள்ளை ஈ பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்த, தேங்காய் பறிக்கும் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள உயர் அழுத்த பூச்சி மருந்து தெளிப்பான் கருவியை, வேளாண் பொறியியல் துறை குறைந்த வாடகைக்கு விடுகிறது.வேளாண் பொறியியல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தென்னை மரங்களில் வெள்ளை ஈ பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேளாண் பொறியியல் துறையில் உள்ள, உயர் அழுத்த தெளிப்பானைப் பயன்படுத்தலாம்.தமிழ்நாடு வேளாண் பல்கலையால், பரிந்துரைக்கப்பட்ட ஒரு லிட்டருக்கு 5 மில்லி வேப்ப எண்ணெய், 5 கிராம் காதி சோப், 1 மில்லி ஒட்டும் திரவம் கலந்த தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தென்னை மரங்களைக் காப்பாற்றலாம்.ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக, 500 லிட்டர் தண்ணீர் அல்லது மருந்துக் கலவையை 35 முதல் 45 தென்னை மரங்களுக்கு தென்னங் கீற்றுகளின் அடிப்பரப்பில் பீய்ச்சி அடிக்கலாம்.கோவை, பொள்ளாச்சி, உடுமலை உட்பட தமிழகத்தில் 20 இடங்களில், வேளாண் பொறியியல் துறையிடம் இந்த இயந்திரம் உள்ளது.இ--வாடகை செயலி வாயிலாக, விவசாயிகள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தே முன்பதிவு செய்து கொள்ளலாம்.ஒரு மணி நேரத்துக்கு ரூ. 450 வாடகை செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, அருகிலுள்ள வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை