உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி - பல்லடம் வழித்தடத்தில், நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.பொள்ளாச்சி நெடுஞ்சாலை கோட்டம், கிணத்துக்கடவு நெடுஞ்சாலை உட்கோட்டம், சுல்தான்பேட்டை பிரிவுக்கு உட்பட்ட, பல்லடம் - - பொள்ளாச்சி ரோட்டில், காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரை மற்றும் அரசூர் பிரிவு முதல் வடசித்துார் பிரிவு வரை, இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படுகிறது.அதில், காமநாயக்கன்பாளையம் முதல் சுல்தான்பேட்டை வரையிலான பகுதியில் முதற்கட்டமாக தார் ரோடு மற்றும் மையத்தடுப்பு அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.இதேபோல, அரசூர் பிரிவு முதல் வடசித்துார் பிரிவு வரையிலான சாலையில், ஜல்லி கலவை பரப்புதல், மையத்தடுப்பு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டும் வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்டத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி பகுதியில், நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது.அங்கிருந்து, 600 மீட்டர் துாரத்திற்கு சாலையில் இடதுபுறம் குழிதோண்டி ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு வருகிறது. இப்பணிகள் முடிந்து, தார்சாலை அமைக்கப்படவும் உள்ளது.நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், 'பொள்ளாச்சி ரோடு, சின்ன வடுகபாளையம் பிரிவு முதல், 2.2 கி.மீ., துாரம் வரை, 5.78 கோடி ரூபாய் செலவில் ரோடு விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. 7 மீ., அகலம் உள்ள ரோடு, 10.5 மீ., அளவு அகலமாகிறது.இரண்டு இடங்களில் தரைமட்ட பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன. இதனால், மூன்று வாகனங்கள் செல்லும் அளவுக்கு ரோடு அகலமாக இருக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை