உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  போலீஸ் உதவி கமிஷனர் மீது ஹிந்து முன்னணி புகார்

 போலீஸ் உதவி கமிஷனர் மீது ஹிந்து முன்னணி புகார்

கோவை: கோவை மாநகர் மாவட்ட ஹிந்து முன்னணி சார்பில், கலெக்டரிடம் அளிக்கப்பட்ட மனு: திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக, கோர்ட் தீர்ப்பை மதிக்காததி.மு.க., அரசைக் கண்டித்து, ஹிந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் கடந்த ஞாயிறு நடந்தது. கோவை மாநகர் மாவட்டம் சார்பில், காந்திபார்க் பகுதியில் மாலை 4:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த இருந்தோம். போலீசார் அனுமதி மறுத்தனர். ஹிந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸ் உதவி கமிஷனர் மகேஸ்வரன், ஹிந்து முன்னணி நகர பொறுப்பாளர் சதீஷை ஆபாச வார்த்தைகளால் பேசி, கடுமையாக தாக்கினார். சதீஷின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. ஹிந்து முன்னணியினரின் செல்போன்களை வாங்கி, அவர் தாக்கியதை எடுத்த வீடியோக்களை அழித்தார். அதிகார துஷ்பிரயோகம் செய்த போலீஸ் உதவி கமிஷனர் மகேஸ்வரன் மீது, சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை