உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஹிந்து அன்னையர் முன்னணி  வேல் வழிபாடு நிகழ்ச்சி 

ஹிந்து அன்னையர் முன்னணி  வேல் வழிபாடு நிகழ்ச்சி 

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், வேல் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.கோவை தெற்கு மாவட்ட ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், வேல் வழிபாடு நிகழ்ச்சி, கோட்டூர், ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் நடைபெற்றன. ஆனைமலையில், ஹிந்து முன்னனி சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு வேலுக்கு அபிேஷகம் நடைபெற்றது.தொடர்ந்து, பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவில் முன், வாகனத்தில் வந்த வேலுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஹிந்து முன்னணி மாநில செயலாளர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஹிந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது:ஈரோட்டில் இருந்து வந்த வேலுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. கொங்கு மண்டலத்தில் உள்ள ஏழு முருகன் திருத்தலங்களில் பூஜிக்கப்பட்ட வேல் வழிபாடு நிகழ்ச்சி, வரும் 25ம் தேதி கொங்கனகிரி முருகன் கோவிலில் துவங்கி, திருப்பூர் அழகுமலையில் வழிபாடு மற்றும் யாகத்துடன் நிறைவு பெறுகிறது.அங்கு நடைபெறும் நிகழ்ச்சிக்கான விழிப்புணர்வு பிரசாரமாக, வேல் வாகனத்தில் கொண்டு செல்லப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை