உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டு வசதி வாரியம் வட்டி தள்ளுபடி

வீட்டு வசதி வாரியம் வட்டி தள்ளுபடி

கோவை; வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மாதத்தவணை தாமதமாக செலுத்தியதற்காக விதிக்கப்படும் அபராத வட்டியை, முழுவதுமாக தள்ளுபடி செய்தும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்துக்கான வட்டியில் ஒவ்வொரு ஆண்டுக்கும், 5 மாதங்கள் கணக்கிட்டு தள்ளுபடி செய்தும், வட்டி தள்ளுபடி சலுகை அறிவித்துள்ளது. இது, அடுத்தாண்டு, மார்ச் 31- வரை அமலில் இருக்கும். வட்டிச்சுமையால் விற்பனை பத்திரம் பெற்றிடாத ஒதுக்கீடுதாரர்கள், பீளமேடு ஹட்கோ காலனியில் உள்ள, கோவை வீட்டு வசதி வாரிய பிரிவு அலுவலகத்தை அணுகலாம். 2015, மார்ச் 31க்கு முன், தவணை காலம் முடிவுற்றும் இது நாள் வரை வாரியத்துக்கு நிலுவை தொகை செலுத்த தவறிய ஒதுக்கீடுதாரர்கள், நிலுவைத்தொகையை ஒரே தவணையாக செலுத்தி, கிரையப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை, கலெக்டர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ