உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு ஊழியர் சங்கத்தின் மனித சங்கிலி இயக்கம்

அரசு ஊழியர் சங்கத்தின் மனித சங்கிலி இயக்கம்

கோவை: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு எதிராகவும், கொடுஞ்செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை கோரியும், அனைத்து நிலைகளிலும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யவும் கோரிக்கை விடுத்து, கோவை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், மனித சங்கிலி இயக்கம் மற்றும் மகளிர் கருத்தரங்கம் நேற்று நடத்தப்பட்டது.மாவட்ட மகளிர் துணை குழு பொறுப்பாளர் சாந்தி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் மாலதி ராணி வரவேற்றார்.மாவட்ட செயலாளர் செந்தில்குமார் சிறப்புரை ஆற்றினார். மாநில துணை பொது செயலாளர் சோமசுந்தரம் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட மகளிர் துணை குழு உறுப்பினர் நதியா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை