உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  கோவை நிறுவனத்துக்கு ஐ.சி.எஸ்.ஐ., விருது

 கோவை நிறுவனத்துக்கு ஐ.சி.எஸ்.ஐ., விருது

கோவை: மத்திய அரசின், கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும், இந்திய நிறுமச் செயலர்கள் நிறுவனத்தின் (ஐ.சி.எஸ்.ஐ.,) 25வது தேசிய விருதுகள் வழங்கும் விழா, டில்லியில் நடந்தது. இதில், 2025ம் ஆண்டுக்கான சிறந்த செயலகத் தணிக்கை அறிக்கைக்கான விருது, கோவையைச் சேர்ந்த, ஈஸ்வரமூர்த்தி அண்டு கம்பெனிக்கு வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான குழுவினர், விருதாளர்களைத் தேர்வு செய்தனர். “இவ்விருதை சிறந்த தரத்தை தொடர்ந்து பேணுவதற்கான பொறுப்பை சுமத்தியிருப்பதாகவே கருதுகிறோம். இவ்விருது கோவைக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கும் பெருமை” என, ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார். நிகழ்ச்சியில், ஜல்சக்தி துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் சவுத்ரி தலைமை விருந்தினராக பங்கேற்றார். ராஜ்யசபா எம்.பி., பி.டி.உஷா, செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே, ஐ.சி.எஸ்.ஐ., தலைவர் தனஞ்செய் சுக்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ