மேலும் செய்திகள்
மார்ச் 20ல் ஓய்வூதியர் குறைதீர் கூட்டம்
02-Mar-2025
மின்வாரிய ஓய்வூதியர்குறைதீர் கூட்டம்
14-Mar-2025
தினம் ஒரு உதவி, மனதுக்கு ஆத்ம திருப்தி.... இதுதான் தற்போது எங்களுக்கு முகவரியாய் இருக்கிறது என்கிறார், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை ஓய்வூதியர் நலச்சங்க செயலாளர் சுந்தரம்.இத்தொழிற்சாலையில், இளநிலை மேலாளராக பணிபுரிந்து, 2016ல் ஓய்வு பெற்ற இவர், கோவையில் வசிக்க துவங்கினார். இவரும், விஜயகுமார் என்பவரும் இணைந்து ஆரம்பித்தது தான், இந்த அமைப்பு.விஜயகுமார், தலைவராக உள்ளார். நீலகிரி, கோவை மாவட்டத்தை சேர்ந்த ஓய்வூதியர்கள் 272 பேர், அமைப்பில் உள்ளனர்.பணப்பலன், ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிப்பது உட்பட பல நடைமுறைகளில், ஓய்வூதியர்களுக்கே உரிய சிக்கல்களை, நிவர்த்தி செய்து கொடுப்பது தான், இவர்களின் பணி.நடப்பாண்டு மட்டும் இதுவரை, 84 பேருக்கு, இது தொடர்பான உதவிகளை செய்துள்ளனர். முக்கியமாக, வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட போது, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக, சங்க உறுப்பினர்களிடம் இருந்து, ரூ.1 லட்சம் திரட்டப்பட்டு, உதவி வழங்கப்பட்டுள்ளது.சுந்தரம் கூறுகையில், ''ஏப்., 6ம் தேதி துடியலுாரில் எங்கள் சங்கம் சார்பில் கூட்டம் நடக்கிறது. அதில் சில ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஓய்வூதியர்களுக்கு இருக்கும் சிரமங்களை களைந்து வருகிறோம். இப்பணி தொடரும்,'' என்றார்.
02-Mar-2025
14-Mar-2025