சாவியை வெளியே வைத்தால்... திருடர்கள் உள்ளே நுழைவார்கள்!
காரமடை டிச. 16--: காரமடை அருகே புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருணா, 39; தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 12ம் தேதி காலை, வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். சாவியை வழக்கம் போல் வெளியே ஒரு மறைவான பகுதியில் வைத்துச்சென்றார். இதை தேக்கம்பட்டியில் வசிக்கும், அசாம் மாநிலத்தை சேர்ந்த சன்மியா, 32, கட்டட தொழிலாளி நோட்டமிட்டுள்ளார். சன்மியா தனது மாநிலத்தை சேர்ந்த, மேட்டுப்பாளையத்தில் வசிக்கும் முகமது அலும்தின் ,38, என்பவருடன் இணைந்து, பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை திருடி சென்றனர். அருணா அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிந்த போலீசார் சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தனர். சன்மியா மற்றும் முகமது அலும்தின் ஆகியோரை கைது செய்து நகைகளை மீட்டனர்.