உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருட்டு நகை அடமானம் வைத்தால் போலீசில் தகவல் தெரிவிக்கலாம்

திருட்டு நகை அடமானம் வைத்தால் போலீசில் தகவல் தெரிவிக்கலாம்

கோவில்பாளையம்; வழியாம்பாளையத்தில் திருடப்பட்ட 100 சவரன் நகைகளை, அடமானம் வைக்கவோ, விற்கவோ வந்தால் தகவல் தெரிவிக்க போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சரவணம்பட்டி அடுத்த வழியாம் பாளையத்தில் பாலசுப்பிரமணியம் என்பவரது வீட்டில் தீபாவளியன்று பின்புற கதவை உடைத்து வீட்டிலிருந்த நெக்லஸ், செயின், வளையல், கம்மல், பிரேஸ்லெட் என 100 சவரன் நகைகளையும், 75 காரட் வைர நகைகளையும் மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு 60 லட்சம் ரூபாய்.இதையடுத்து கோவில் பாளையம் போலீசார் பஸ் ஸ்டாண்ட் உள்பட முக்கிய இடங்களில் ஒட்டியுள்ள போஸ்டரில், திருட்டு போன நகைகளின் போட்டோ அச்சடிக்கப்பட்டுள்ளது. 'இந்த நகைகளை யாராவது அடமானம் வைக்கவோ, விற்கவோ வந்தால், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி.,க்கு 94982 16797 அல்லது கோவில்பாளையம் இன்ஸ்பெக்டருக்கு 94981 04851 மொபைல் எண்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்,' என அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை