மேலும் செய்திகள்
காலமானார் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
31 minutes ago
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
49 minutes ago
ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்
1 hour(s) ago
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
2 hour(s) ago
கோவை:நவ இந்தியாவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், முதுநிலை பட்டமேற்படிப்பு முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. எஸ்.என்.ஆர்.,சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். கோவை மாநகர வடக்கு கோட்ட துணை காவல் கமிஷனர் ஸ்டாலின் பேசுகையில், ''தெளிவான சிந்தனைகளில் இருந்தே, உயர்வான எண்ணங்கள் பிறக்கின்றன. திட்டமிடாமல் உழைத்தால், வெற்றி பெற இயலாது. குறுகிய கால திட்டம், நீண்டகால திட்டம் வகுத்து அதை நோக்கி முன்னேற வேண்டும்,'' என்றார்.கோவை ரைபிள் கிளப்பில் நடைபெற்ற, 49வது துப்பாக்கி சுடுதல் போட்டியில், 50 மீட்டர் புரோன் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாணவர் திவாகர் மற்றும் 50 மீட்டர் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் வெண்கலப்பதக்கம் வென்ற மாணவி ஆதர்ஷிகா ஆகியோர், விழாவில் பாராட்டப்பட்டனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி செயலர் சிவக்குமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
31 minutes ago
49 minutes ago
1 hour(s) ago
2 hour(s) ago