உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

 சட்டவிரோதமாக மது விற்றவர் கைது

சூலூர்: சூலூர் போலீசார் பட்டணம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு உள்ள வங்கி அருகே சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுங்கி வைத்து விற்பனை செய்த நபரை பிடித்தனர். அந்நபர் வைத்திருந்த சாக்கில், 70 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அந்நபர் பட்டணத்தை சேர்ந்த செந்தில்குமார், 48 என்பதும் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வரு கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்