| ADDED : மே 19, 2024 04:01 PM
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம், அன்னூர் அருகே சொக்கம்பாளையம் திருமுருகன் நகரில், தோட்டத்தில் வசிப்பவர் விஜயகுமார், 45. பா.ஜ., முன்னாள் நிர்வாகி. இவரது வீட்டில் மர்ம நபர்கள், கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த, 1.50 கோடி ரூபாய் மற்றும் ஒன்பது பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து விஜயகுமார் அன்னூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கொள்ளையர்களை கண்டுபிடிக்க மேட்டுப்பாளையம், டி.எஸ்.பி., பாலாஜி தலைமையில், 7 தனி படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர். இவரது வீட்டில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், இவரது வீட்டிற்கு வரும் வழியில் உள்ள கண்காணிப்பு கேமராகளை, தனிப்படை போலீசார் கண்காணித்தும், கொள்ளையர்களை பிடிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவையிலிருந்து மோப்ப நாய் வந்தது. இந்த நாய் விஜயகுமார் வீட்டில் இருந்து, சொக்கம்பாளையம் வரை சென்றது.