உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாகம் திறப்பு

குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாகம் திறப்பு

கோவை:ரத்தினபுரியில் ரூ.1 கோடி மதிப்பீட்டிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாகம் நேற்று திறந்து வைக்கப்பட்டது.மாநகராட்சி, 46வது வார்டு, ரத்தினபுரி அருகே கணபதி நஞ்சப்பன் வீதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் வளாகம் கட்டப்பட்டுள்ளது. தனியார் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள இந்த வளாகத்தை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நேற்று திறந்து வைத்தார். இதில், 120 குழந்தைகள் பயன்பெறும் வகையில் ஆறு மையங்கள் இடம்பெற்றுள்ளன. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றி செல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை