உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மசானிக் மருத்துவ மையத்தில் தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்

மசானிக் மருத்துவ மையத்தில் தீவிர சிகிச்சை பிரிவு துவக்கம்

கோவை;கோவை மசானிக் குழந்தைகள் மருத்துவ மையத்தில், புதிய அறுவை சிகிச்சை அரங்குடன், தீவிர சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டது.இத்திட்டத்தை நிறைவேற்றித்தர, ரோட்டரி கிளப் முடிவு செய்தது. திட்டத்திற்கான மதிப்பீடு, 1.26 கோடி ரூபாயாக இருந்தது. இதற்கான உதவியை, கோவை மேற்கு ரோட்டரி கிளப் மற்றும் பென்டாங் ஆகியவை இணைந்து வழங்கின. லீமா ரோஸ் மார்ட்டின், கோவை மேற்கு, கோவை ஸ்பெக்ட்ரம், கோவை ஜெனித் ரோட்டரி கிளப்களை சேர்ந்த சந்தோஷ் பட்வாரி, சசிக்குமார், கைலாஷ் ஜெயின் உள்ளிட்டோர், நன்கொடைகளை வழங்கினர். அறுவை சிகிச்சை அரங்கிற்கு தேவையான உபகரணங்களை, கோவை மிட்டவுன் ரோட்டரி கிளப், கோலாலம்பூர் ரோட்டரி கிளப் மேற்கு மாவட்டம் சார்பில், கொச்சவுசப் தாமஸ் சித்திலப்பள்ளி வழங்கினார். கோவை மிட்டவுன், கோவை கிழக்கு, கோவை கேலக்ஸி, கோவை வடக்கு மற்றும் கோவை சென்டினியல் ரோட்டரி கிளப் உறுப்பினர்களும், ராஜசேகர் ஸ்ரீனிவாஸ் ஆகியோரும் வழங்கினர்.திட்ட துவக்க விழாவில், கிராண்ட் மாஸ்டர் அனிஷ்குமார் சர்மா, ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்ட கவர்னர் விஜயக்குமார், தென் மாநில மண்டல கிராண்ட் மாஸ்டர் மனோகரன், கோவை மசானிக் அறக்கட்டளையின் தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை