உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயர் கல்வியில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் அதிகரிப்பு

உயர் கல்வியில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் அதிகரிப்பு

கோவை; கோவையில் அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வியில் சேர்க்கை பெற்ற மாணவர்களின் விகிதம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 15 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மாவட்டத்தில் உள்ள 114 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 2 பொதுத்தேர்வில் 10,896 மாணவர்கள் பங்கேற்றனர். இவர்களில் 10,301 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். துணைத்தேர்வு எழுதிய, 656 பேரில் 350 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் உயர்கல்வி சேர்க்கை விவரங்களைக் கண்காணிக்க, மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் உட்பட முக்கிய அரசு அதிகாரிகள் நோடல் அதிகாரிகளாக, பள்ளிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த கண்காணிப்பு நடவடிக்கைகள் வாயிலாகவும், உயர்கல்வி சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இதன் வாயிலாக, அரசுப்பள்ளி மாணவர்களில் 98 சதவீதம் பேர் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். 2024-2025 கல்வியாண்டில், உயர்கல்வி சேர்க்கை விகிதம் 83.6 சதவீதமாக இருந்தது. தற்போது இது 98.6 சதவீதமாக உயர்ந்துள்ளது.

கல்லுாரியில் சேராத 150 மாணவர்கள்

திட்ட ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், 'கல்லூரிக் கனவு திட்டத்தின் கீழ் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாற்றுத்திறன், குடும்பச் சூழல், விருப்பமின்மை போன்ற காரணங்களால் சுமார் 150 மாணவர்கள் இன்னும் கல்லூரியில் சேரவில்லை. அவர்களையும் சேர்க்க முயற்சி செய்து வருகிறோம்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி