உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்க்கரை, ரத்த அழுத்தம் கட்டுப்பாடு அதிகரிப்பு

சர்க்கரை, ரத்த அழுத்தம் கட்டுப்பாடு அதிகரிப்பு

- நமது நிருபர் -மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ், மாநில அளவில், 2.30 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், 2021 ஆக.,ல் துவக்கப்பட்டது. வட்டார அளவில் ஒவ்வொரு பகுதியாக தொடர்ந்து முகாம்கள் நடத்துவதும், தேவையானவர்களுக்கு வீடுகளுக்கே சென்று, மருத்துவ உதவிகள் வழங்குவதும் இதன் முக்கிய அம்சங்கள். இதன் வாயிலாக, உயர் ரத்த அழுத்த நோய் பாதிப்புள்ளவர்கள், 1.13 கோடி பேர், நீரிழிவு நோயாளிகள் 53 லட்சம் பேர், உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இரண்டும் உள்ளவர்கள், 49 லட்சம் பேர், புற்றுநோய் அறிகுறி உள்ளவர்கள், 84,818 உட்பட, 2.30 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர். தேசிய சுகாதார இயக்கக அதிகாரி ஒருவர் கூறியதாவது: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், நோய் கட்டுப்பாடு சிறப்பாக உள்ளது. 'ஸ்டெப்ஸ்' எனப்படும், தொற்றா நோய் கணக்கெடுப்பு புள்ளிவிபரங்களின் படி, உயர் ரத்த அழுத்த நோய் மற்றும் நீரிழிவு நோய் கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த, 2019-20ல் உயர் ரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டில் உள்ளவர்கள், 7.3 சதவீதமாக இருந்தனர். 2023-24ல் இது, 17 சதவீதமாக உள்ளது. நீரிழிவு நோய் கட்டுப்பாடு, 10.8 சதவீதத்தில் இருந்து 16.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. பெரும்பாலும், இவ்விரு நோய்கள் காரணமாகவே, பல இணை நோய்களின் தாக்கம் அதிகரித்து, இறப்புகளும் அதிகரிக்கின்றன. கட்டுப்பாடு வந்துள்ளதால், இந்நோயாளிகளின் ஆயுள் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி