உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு மையத்தை திறக்க வலியுறுத்தல்

ரயில்வே ஸ்டேஷனில் முன்பதிவு மையத்தை திறக்க வலியுறுத்தல்

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், முன்பதிவு மையத்தை திறக்க வேண்டும்,' என, பொள்ளாச்சி தாலுகா சதுரங்கம் சங்கம் வலியுறுத்தியுள்ளது.பொள்ளாச்சி தாலுகா சதுரங்க சங்க செயலாளர் பரமேஸ்வரன் கூறியதாவது:பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம், பொள்ளாச்சி வழியாக 10 ஆண்டுகளுக்கு முன் ஓடிய ரயில்களை மீண்டும் இயக்கவில்லை. கொரோனா காலத்தில் ஸ்பெஷல் ரயில் என அறிவித்து சாதாரண கட்டணத்தை, 100 மடங்கு ஏற்றி இன்று வரை குறைக்காமல் உள்ளது.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் செயல்பட்டு வந்த முன்பதிவு மையத்தை மூடி, பொதுமக்களுக்கு மன உளைச்சலையும், அதிருப்தியையும் பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.முன்பதிவு அலுவலகத்தை உடனடியாக திறந்து, மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். முன்பதிவு நேரடியாக செய்தால், ஒரு பயணச்சீட்டுக்கு 120 ரூபாய் மிச்சமாகிறது. 'ஆன்லைன்' வாயிலாக முன்பதிவு செய்யும் போது சர்வீஸ் சார்ஜ் என சேர்த்து வசூலிக்கப்படுகிறது. எனவே, அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தக்கூடிய முன்பதிவு மையத்தை உடனடியாக திறக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை