உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட தொழில் மையம் வாயிலாக கடன் பெற்ற தொழிற்சாலைகளில் ஆய்வு

மாவட்ட தொழில் மையம் வாயிலாக கடன் பெற்ற தொழிற்சாலைகளில் ஆய்வு

கோவை; கோவை மாவட்ட தொழில் மையம் சார்பில், செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின், கீழ் மானியத்துடன் கடனுதவி பெற்றவர்களின் தொழிற்சாலைகளை, கலெக்டர் பார்வையிட்டார்.கோவை கணபதி, சிவானந்தபுரம், ராம்நகர், விளாங்குறிச்சி பகுதிகளை சேர்ந்த தொழில் முனைவோர்களின் தொழில் நிறுவனங்களை, அவர் ஆய்வு செய்தார்.தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மூலமாக, தொழில் துவங்க கோவை மாவட்ட தொழில் மையம் மூலம், கடந்த மூன்றரை ஆண்டுகளில், 140 தொழில் முனைவோர்க்கு, 36.13 கோடி ரூபாய் கடனுதவியுடன், ரூ. 6.74 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.1.68 கோடி வங்கிக் கடனுதவி பெற்று, மானியமாக 41.94 லட்சம் ரூபாய் பெற்று, கணபதியில் செயல்பட்டு வரும், உலோக தகடு உற்பத்தித் தொழில் நிறுவனத்தை, கலெக்டர் கிராந்திகுமார் ஆய்வு செய்தார்.அவருடன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா, உதவி பொறியாளர் கணபதிசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை