உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்

 துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தல்

மேட்டுப்பாளையம் மார்ச் 17-: -: மேட்டுப்பாளையம் உட்கோட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில், துப்பாக்கிகளை வைத்திருப்போர் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மேட்டுப்பாளையம் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பில்லுார் டேம், அன்னூர் உட்பட 5 போலீஸ் ஸ்டேஷன்களில், தனி நபர்கள் உரிமம் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகளை, அந்தந்த போலீஸ் ஸ்டேஷன்களில் ஒப்படைக்க போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். போலீசார் கூறுகையில், ''மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில், சுமார் 55க்கும் மேற்பட்டோர் உரிமம் பெற்று துப்பாக்கி வைத்துள்ளனர். துப்பாக்கிகளை ஒப்படைக்க அறிவுறுத்தியுள்ளோம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை