உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருத்துவ சிகிச்சை தொகை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

மருத்துவ சிகிச்சை தொகை வழங்க இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு

கோவை; கோவை அருகே கணியூர், பாரதியார் நகரில் வசிப்பவர் சரவணகுமார்; ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 2022, ஜன. 27ல் குடும்ப மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்தார். இவரது தாய் சிவகாமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு, 1.69 லட்சம் ரூபாய் செலவானது. மருத்துவ சிகிச்சை தொகை வழங்கக்கோரி, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பித்தார். மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேருவதற்கு முன்பே, சிவகாமிக்கு நோய் பாதிப்பு இருந்ததை மறைத்து விட்டதாகக் கூறி பணம் வழங்க மறுத்தனர். இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவில், 'இன்சூரன்ஸ் நிறுவனம், 1.69 லட்சம் ரூபாய் வழங்குவேதாடு,மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவுக்கு 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை