உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரிக்கெட் நடுவராக விருப்பமா? 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கிரிக்கெட் நடுவராக விருப்பமா? 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடுவர் மற்றும் 'ஸ்கோரர்' தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.கிரிக்கெட் நடுவர், ஸ்கோரர்களாக தேர்வு ஆவதற்கு விதிமுறைகள், செயல்முறைகள் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இதற்கான பயிற்சி முகாம், அடுத்த வாரம் கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படுகிறது.இதில், பங்கேற்க விரும்புவோர், நவ இந்தியாவில் உள்ள ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி வளாகத்தில் செயல்படும், கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் விண்ணப்பிக்கலாம். நேற்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், வரும் 10ம் தேதி வரை விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர் மகாலிங்கத்தை, 97877 40390 என்ற எண்ணில், தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை