உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச சிலம்ப போட்டி; கோவை மாணவருக்கு தங்கம்

சர்வதேச சிலம்ப போட்டி; கோவை மாணவருக்கு தங்கம்

கோவை; நேபாளத்தில் நடந்த இந்தோ - நேபாள சர்வதேச சாம்பியன்ஷிப்- போட்டியில், கோவை வீரர் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார்.நேபாளத்தில், 12வது இந்தோ - நேபாள சர்வதேச சாம்பியன்ஷிப்- போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், 20 வயதுக்கு மேற்பட்ட சீனியர் பிரிவு சிலம்பம் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் பாராமெடிக்கல் சயின்ஸின், பிசியோதெரபி கல்லுாரி மாணவர் கார்முகிலன் பங்கேற்றார்.நான்கு நாடுகள் கலந்து கொண்ட இப்போட்டியின் இறுதியில், சீனாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இவர் இதற்கு முன், சிலம்பத்தில் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பிடித்து, மூன்று உலக சாதனைகளை படைத்துள்ளார். மாணவரை, கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை