மேலும் செய்திகள்
சிறுமி கர்ப்பம் சிறுவன் மீது போக்சோ வழக்கு
26-Mar-2025
தொண்டாமுத்தூர்:கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் சுற்றுப் பகுதியில், ஏராளமான வட மாநிலத்தவர் குடும்பத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 31ம் தேதி, ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிவிட்டு, வாய் பேச முடியாத, 16 வயது சிறுமி, வீட்டில் இருந்து அருகிலுள்ள கடைக்கு, தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.சிறுமியை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர், ஆட்கள் நடமாட்டமில்லாத பகுதிக்கு சிறுமியை துாக்கி சென்று பலாத்காரம் செய்தார். பின், அங்கேயே விட்டுச் சென்றார். அவ்வழியாக சென்றவர்கள், சிறுமியை மீட்டு, பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.சிறுமியின் சகோதரர், பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், 17 வயது சிறுவன், அந்த சிறுமியை பைக்கில் ஏற்றி சென்று பலாத்காரம் செய்தது தெரிந்தது. அச்சிறுவனை போலீசார் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
26-Mar-2025