பூசாரிகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர அழைப்பு
கோவை, ; இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத திருக்கோவில்களில், ஐந்தாண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பூசாரிகளை, கிராமக்கோவில் பூசாரிகள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்க, அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.விண்ணப்பதாரர் வயது 25-க்கு குறையாமலும், 60 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். அவரது ஆதார் அட்டையுடன் அவரது குடும்ப உறுப்பினரின் ஆதார் அட்டை நகல், இணைக்க வேண்டும். விண்ணப்பதாரரின் போட்டோ, அதனுடன் கூடிய கையொப்பமிட்டிருக்க வேண்டும். வழிபாட்டுச்சான்று ஐந்தாண்டுகளுக்கும் மேல் இருக்க வேண்டும். வருவாய் சான்று ஒரு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.ஐந்து ஆண்டுகளுக்கு திருக்கோவிலில், பூசாரியாக பணிபுரிந்ததற்கான சான்று வைத்திருக்க வேண்டும். பணிபுரியும் திருக்கோவில் புகைப்படம் இணைத்திருக்க வேண்டும். திருக்கோவில் அமைவிடச்சான்று, சர்வே எண். உட்பிரிவு எண் மற்றும் விஸ்தீரணம் ஆகியவை குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலரிடம் சான்று பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் பணிபுரியும் திருக்கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத, திருக்கோவிலாக இருக்க வேண்டும்.கோவை, நீலகிரி மாவட்டத்திலுள்ள, கிராம கோவில் பூசாரிகள் தங்களது விண்ணப்பத்தினை தக்க ஆவணங்களுடன், அறநிலையத்துறை உதவி கமிஷனர் அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம்.