மேலும் செய்திகள்
ஏரியில் மிதந்த வாக்காளர் அடையாள அட்டைகள்
2 minutes ago
பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
3 minutes ago
கவிஞர் ஈரோடு தமிழன்பன் மறைவு
4 minutes ago
மத்திய அரசை கண்டித்து 26ல் ஆர்ப்பாட்டம்
5 minutes ago
பொள்ளாச்சி: ''கோழிக்கோட்டில் பாசன ஆதாரங்களை நிர்வகித்தல் பயிற்சி நாளை நடக்கிறது. அதில், பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்,'' என, ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் தெரிவித்தார். ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை: 'அட்மா' திட்டத்தில், 2025 -26ம் ஆண்டு பாசன ஆதாரங்களை நிர்வகித்தல் என்ற தலைப்பில், மத்திய அரசின் நிதி உதவியுடன் கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் செயல்படும் நீர்நிர்வாக மேலாண்மை பயிற்சி நிலையத்தில், நாளை (24ம் தேதி) முதல் ஐந்து நாட்கள் பயிற்சி நடக்கிறது. அதில், ஆனைமலை வட்டாரத்தை சேர்ந்த, 25 - 55 வயதுடைய விவசாய குடும்பத்தை சேர்ந்த பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ள ஆண், பெண் இருபாலரும் உரிய நில உரிமை சிட்டா, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை நகலுடன் விண்ணப்பிக்கலாம். உதவி தொழில்நுட்ப அலுவலர் அர்ஜூனன் 90800 20188 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.இப்பயிற்சிக்கு கோழிக்கோடு அழைத்துச் செல்ல, 20 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. முதலில் முன்பதிவு மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 minutes ago
3 minutes ago
4 minutes ago
5 minutes ago