ஆசிரியர் வேலைக்கு ஆசையா விண்ணப்பிக்க நேரம் வந்தாச்சு
கோவை : கோவை, ராஜவீதியில் இயங்கும் அரசு மகளிர் பயிற்சி நிறுவனத்தில், 2025-2026ம் கல்வியாண்டிற்கான 2 ஆண்டு டிப்ளமா தொடக்கக் கல்வி பட்டய படிப்பு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், 31.07.2025 தேதியன்று 35 வயது நிரம்பியிருக்க வேண்டும்.ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் கைம்பெண்கள் அதே தேதியில் 40 வயதும்; பொது, பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 32 வயதும், பூர்த்தி செய்திருக்க வேண்டும்.ஜூன் 6, 2025 வரை நடைபெறும் நேரடி சேர்க்கையில், 10, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளின் மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், விண்ணப்பதாரரின் புகைப்படம், மாற்றுச்சான்றிதழ் மற்றும் தேவையான சான்றிதழ்களை, வைத்திருக்க வேண்டும்.எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ரூ.250ம் மற்ற அனைத்து பிரிவினரும், ரூ.500ம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விவரங்களுக்கு, https://scert.tnschools.gov.inஎன்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.