உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‛இல்லக்கனவு இனி வெறும் கனவுதானோ? கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் பாதிப்பு

‛இல்லக்கனவு இனி வெறும் கனவுதானோ? கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வால் பாதிப்பு

கோவை; கட்டுமானப் பொருட்களின் விலை, 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், வீடு கட்டிக் கொண்டிருக்கும் நடுத்தர மக்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.சில மாதங்களுக்கு முன், தமிழகத்தில் கல் குவாரிகளில் இருந்து கல் உடைத்து எடுத்து வர கொடுக்கும் நடைச்சீட்டுக்கு, அரசுக்கு இதுவரை கனமீட்டர் அடிப்படையிலேயே வரி செலுத்தப்பட்டு வந்தது.தற்போது மெட்ரிக் டன் அடிப்படையில், வரி செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது. வீடு கட்டுவோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.டிப்பர் லாரியில் 4 யூனிட் எம்.சாண்ட்டுக்கு, 18 ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், புதிய நடைமுறையால், 22 ஆயிரம் வரை நிலை நிர்ணயிக்கப்பட்டது. கட்டுமானத்தில் எம்.சாண்ட் கொண்டே 80 சதவீத பயன்பாடு உள்ள நிலையில், வீடு கட்டிக் கொண்டிருக்கும் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாயினர்.இதை கண்டித்து, சில மாதங்களுக்கு முன், தமிழகம் முழுவதும், கட்டுமானத் துறையினர் போராட்டம் நடத்தினர். விலையை குறைக்கக் கோரி அரசு தெரிவித்த நிலையில், சொற்பத் தொகை மட்டுமே குறைக்கப்பட்டது. எதிர்பார்த்த அளவு விலை குறைக்கப்படாத நிலையில், இல்லக் கனவை நிறைவேற்ற வங்கியில் கடன் வாங்கி காத்திருப்போர் விழிபிதுங்கியுள்ளனர்.கட்டுமானத் துறையினர் சிலர் கூறியதாவது:எம்.சாண்ட், செங்கல், ஜல்லிக்கற்கள், சிமென்ட் உட்பட கட்டுமான பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இருந்த விலையை விட, 25 முதல் 30 சதவீதம் வரை உயர்ந்து விட்டது. நடப்பாண்டு ஐந்து முறை, சிமென்ட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. திட்டமிட்டு, வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டிக் கொண்டிருப்போர், இந்த விலையேற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர்.பொறியாளருக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் சில நேரங்களில், இதனால் பிரச்னை ஏற்படுகிறது. எனவே, கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வு பிரச்னைக்கு, அரசு தீர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

c.mohanraj raj
ஜூலை 10, 2025 18:44

அத்தனை பேரிடமும் பணம் வாங்கினால் கட்டுமான பொருள்கள் உயராமல் என்ன செய்யும் சிமெண்ட் கம்பெனி ஸ்டீல் கம்பெனி கொத்தனாரை தவிர அனைவரிடமும் பணம் வாங்கப்பட்டுள்ளது பிறகு எப்படி உருப்படும் அந்த துறை


அப்பாவி
ஜூலை 10, 2025 08:16

பிரதான் மந்திரீ வூடு யோஜனாவுலே கேட்டுப் பாக்கலாமே..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை