மேலும் செய்திகள்
சிறுவாணியில் 18 மி.மீ., மழை
01-Oct-2024
கோவை: இம்மாத துவக்கத்தில் இருந்தே கோவை நகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பரவலாக மழைப்பொழிவு காணப்படுகிறது. கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணை பகுதியிலும், மழை காணப்படுகிறது.வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''அடுத்த நான்கு நாட்களுக்கு, கொங்கு மண்டலத்தில் கிழக்கு, வடக்கு பகுதியில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும். கோவை - அவிநாசி ரோடு தெற்கே மழை தாக்கம் குறைவாக இருக்கும். ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர் நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உண்டு,'' என்றார்.
01-Oct-2024