உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராகவேந்திரர் கோவிலில் ஜெயந்தி விழா

ராகவேந்திரர் கோவிலில் ஜெயந்தி விழா

மேட்டுப்பாளையம்;காரமடையில் ராகவேந்திரா கோவிலில், 429 ஜெயந்தி விழா நடைபெற்றது.காரமடையில் ஸ்ரீ ஜெய மாருதி ஸ்ரீ குரு ராகவேந்திரா கோவில் உள்ளது. இங்கு ராகவேந்திரர் சுவாமிக்கு, 429வது ஜெயந்தி விழா நடந்தது.காலை, 6:00 மணிக்கு நிர்மால்ய தரிசனம், அதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜையில் பக்தர்கள் ஸ்ரீ ராகவேந்திரா குரூஸ் ஸ்தோத்திரம், பாராயணம் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.இவ்விழாவில், திரைப்பட பின்னணி பாடகர் பிரசன்னா பங்கேற்று, ராகவேந்திரா சுவாமி பாடல்களை பாடினார். சிறப்புரை ஆற்றினார்.மதியம், ராகவேந்திர சுவாமிக்கு மகா தீப ஆராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ