உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீட்டில் நகை, பணம் திருட்டு

வீட்டில் நகை, பணம் திருட்டு

கோவை;செல்வபுரம் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ், திருச்செங்கோடு சென்றிருந்தார். வயதான முதியவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மறுநாள் காலை முதியவர் பார்த்தபோது, பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் வைத்திருந்த ரூ.1.25 லட்சம் பணம் மற்றும், 11 கிராம் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. செல்வபுரம் போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த, 30 வயது நபரை பிடித்து விசாரித்தனர். முறையாக பதில் அளிக்கவில்லை. அவரது கைரேகைகள், திருட்டு நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகையுடன் ஒத்துப்போனது.வாலிபர் செல்வராஜ் வீட்டில் திருடியது தெரிந்தது. விசாரணையில், அவர் செல்வபுரம் எல்.ஐ.சி., காலனியை சேர்ந்த ராமதுரை, 31 எனத் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை